பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று மதியம் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று மதிய நேரத்தில் உருவான நிலநடுக்கம் 6.2 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
அந்நாட்டிலுள்ள சாரங்கானி என்ற கடலோர நகரில் மதியம் 2:26 மணியளவில் 231 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகியிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தால் வேறு பாதிப்புகள் உண்டானதா? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.