துருக்கி நாட்டில் அதிகாலை நேரத்தில் உருவான பயங்கர நிலநடுக்கம் 6.0 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் அதிகாலை நேரத்தில் மிக பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியில் ஓடியுள்ளனர். அதிகாலை 4:08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
புவியியல் ஆய்வு மையமானது, இந்த நிலநடுக்கம் 6.0 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாக தெரிவித்திருக்கிறது. பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தது. இதனால், மக்கள் பதறியுள்ளனர். எனினும், நல்ல வேளையாக எந்த சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.