Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் நிலநடுக்கம்…. பீதியில் மக்கள்…!!

வடமாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தங்கள் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகரில் பகுதியில் இருந்து 4:38 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. பித்ரோகரில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகிஉள்ளது.

இதனால் ஏற்பட்ட சேதங்கள் பாதிப்புகள் பற்றிய விவரம் இல்லை. கடந்த வாரம் தஜிகிஸ்தான் நாட்டில் மையம் கொண்டு ஏற்பட்ட 6.3 அளவு நிலநடுக்கத்தின் தாக்கம் வடமாநிலங்களிலும் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |