ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஈரான் நாட்டின் தெற்கே உள்ள குவாலேகாஜி என்ற பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகி இருந்ததாகவும் நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே நிலநடுக்க பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக சம்பவ இடத்திற்கு ஆய்வுக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.