Categories
உலக செய்திகள்

குறைந்த கொரோனா பரவல்…. விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.. சீனா அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் குறைந்திருப்பதால் சீன அரசு விசா கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தது. அதன் பிறகு மீண்டும் கொரோனா தலை தூக்க தொடங்கியது. எனவே, அந்நாட்டு அரசு பூஜ்ஜிய கொரோனா கொள்கை என்னும் அடிப்படையில் கொரோனாவை தடுக்க தீவிரமான  நடவடிக்கைகளை மேற்கொண்டது.

மேலும், சர்வதேச பயணங்களுக்கு தடை, வணிக ரீதியான தொடர்புகளை கட்டுப்படுத்துதல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றியது. சர்வதேச பயண தடை காரணமாக அங்கு கல்வி பயின்று வந்த இந்திய மாணவர்கள் மீண்டும் அங்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் அங்கு கொரோனா பரவல் குறைய தொடங்கியிருப்பதால், கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலில் விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவிருக்கிறது. எனவே, அந்நாட்டில் மருத்துவம் போன்ற கல்விகளை பயின்று வந்த பிற நாட்டு மாணவர்கள் மீண்டும் அங்கு சென்று கல்வியை தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |