டாக்டர் ஒருவர் தனது தங்கை மகள்கள் சடங்கிற்கு செய்துள்ள தாய்மாமன் சீர் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று நடத்தி வருபவர் ராஜா. இவருக்கு சில வருடங்களுக்கு திருமணமாகி அவருடைய மனைவியும் டாக்டராக பனி புரிந்து வருகிறார். இவருடைய தங்கை மோகனப்பிரியாவுக்கு திருமணமாகி ரிதன்யா, மித்ரா ஸ்ரீ என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அந்த இரண்டு பெண்களுக்கும் தற்போது சடங்கு செய்யும் நிகழ்வு மோகனபிரியா – முத்துக்குமார் அவர்களின் விவசாய தோட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த விழாவிற்கு தாய்மாமன் சீதனமாக கொடுக்கும் வழக்கப்படி தாய்மாமனான டாக்டர் ராஜா தாய்மாமன் சீரை சிறப்பான செய்து கொடுக்க வேண்டுமென்று திட்டமிட்டு, அதை பாரம்பரிய முறையிலும் அனைவரும் வியக்கும் விதத்தில் செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளார். இதையடுத்து 100க்கும் மேற்பட்ட தட்டுகளில் சீர் வகைகளை தாங்களே தயாரித்து 200க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகளில் உறவினர்களுடன் கள்ளிப்பட்டியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அவரே மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டு சென்றுள்ளார்.
பின்னால் அவருடைய உறவினர்கள் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளில் வந்துள்ளனர் . இதை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். மேலும் இந்த நாகரிக காலத்திலும் முன்பு முன்னோர்கள் காலத்தில் செய்யப்பட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டதும் , பித்தளை பாத்திரத்தில் சமைக்கப்பட்ட பாரம்பரிய உணவுகளும், சடங்கில் கலந்து கொண்டவர்களை 30 வருடங்கக்குப் பின்னால் தள்ளிக் கொண்டு போய் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.