இலங்கையில் கடந்த 2019ம் வருடத்தில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது குறித்த வழக்கில் 42 பேர் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இலங்கை காவல்துறையினர், இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் நாட்டில் உள்ள தேவாலயங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பில் இந்திய அரசு முன்பே எச்சரித்திருந்தது. ஆனாலும் தாக்குதல் தடுக்கப்படவில்லை. இது அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையில் இயங்கும் ஆளும்கட்சியின் சதி தான் என்று மால்கம் ரஞ்சித் என்ற பாதிரியார் குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும், இத்தாக்குதல் குறித்த முழு விவரங்களை புலனாய்வு அமைப்புகள், மறைக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் அது உண்மை கிடையாது. ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் 42 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.