ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய அம்சமாக அமையும் ஈஸ்டர் முட்டைகளுக்கு ஏன் சிவப்பு வண்ணம் பூசப்படுகிறது என்பது பற்றிய தொகுப்பு.
பண்டைய காலங்களில் வர்ணம் பூசப்பட்ட முட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இன்றைக்கு சாக்லேட் போன்ற உண்ணக்கூடிய பொருட்களால் ஈஸ்டர் முட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு ஈஸ்டர் தினத்தன்று குழந்தைகள் கண்டறியுமாறு வைக்கப்படுகிறது. அதிக முட்டைகளை கண்டறியும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
முட்டையானது புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. முட்டை அடைக்கப்பட்டு அதிலிருந்து புதிய கோழிக்குஞ்சு வெளிவருவது புதிய வாழ்வின் குறியீடாக கருதப்படுகிறது.
மிகவும் பாரம்பரியமான கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் முட்டை என்பது விரதத்தை முடிக்கும் கொண்டாட்டம் மட்டுமன்றி இயேசு மீண்டும் பிறப்பதற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது.
பாரம்பரியமாக ஈஸ்டர் முட்டைகள் சிவப்பு நிறம் பூசப்பட்டு வருகிறது. அது இயேசு சிலுவையில் சிந்திய ரத்தத்தைக் குறிக்கிறது. அதனுடைய கடின ஓடு கிறிஸ்துவின் மூடப்பட்ட கல்லறையையும் அதனை உடைப்பது மரணத்திலிருந்து அவர் உயிர்த்தெழுதலையும் குறிக்கிறது.