தேவையான பொருட்கள் :
கோதுமை ரவா – 1 கப்,
துருவிய வெல்லம் – 1 கப்,
தேங்காய்த்துருவல் – 1/2 கப்,
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்,
நெய் – 6 டேபிள் ஸ்பூன்,
முந்திரி, திராட்சை – தலா 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
ஒரு வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கோதுமை ரவையை சிவக்க வறுத்து 2 கப் நீர் விட்டு வேக விடவும். வெந்ததும் துருவிய வெல்லத்தினைச் சேர்த்து இரண்டு கொதி விட்டு தேங்காய்த்துருவலை அரைத்து பால் எடுத்து பாயசத்தில் சேர்த்து ஒரு கொதி விட்டு ஏலப்பொடி தூவி வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சை வறுத்துச் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். கோதுமை ரவை பாயசம் ரெடி!