தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு 4
ஜவ்வரிசி கால் கப்
வெங்காயம்-2
வறுத்த வேர்க்கடலை 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
சீரகம் கால் ஸ்பூன்
கொத்தமல்லி கால் கப்
கடலை மாவு ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் , உப்பு , நல்லெண்ணெய் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை:
உருளைக்கிழங்கை குக்கரில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.வெந்தபின் தோல் உரித்து நன்றாக மசித்துக்கொள்ளவும்.வெங்காயம் , பச்சை மிளகாய் , கொத்தமல்லி மூன்றையும் பொடியாக நறுக்கவும்.வறுத்த வேர்க்கடலையை பொடியாக்கவும்.வேகவைத்து மசித்த கிழங்குடன் மற்ற எல்லா குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி முதலில் சிறு புளி போட்டு கருக பொரித்தெடுக்கவும்.பிசைந்து வைத்த மாவை சிறிய உருண்டைகளாக செய்து எண்ணை தடவிய இலையில் வடையை தட்டி மத்தியில் சிறிது துவாரம் போட்டு சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால் உருளை ஜவ்வரிசி வடை தயார்.