உணவு சாப்பிட்டபின் என்ன விஷயங்களை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இது தவறானது. சாப்பிட்ட உடனே நடந்தால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும்.
சாப்பிட்டதும் தூங்கக் கூடாது சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் செரிமானம் ஆகாது.
உணவருந்திய பிறகு ரத்த ஓட்டம் நமது வயிற்றுப் பகுதிக்கு தான் செல்ல வேண்டும். சாப்பிட்ட உடன் வெந்நீர் குடிப்பதால் சூடான உடலை குளிர்ச்சியாக்க செய்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று விட வைக்கின்றது.
சாப்பிடும்போதோ, சாப்பிடுவதற்கு முன்போ பழங்களை சாப்பிடக்கூடாது. வயிற்றில் வாயுவை உருவாக்கும்.
சாப்பிட்டதும் தேநீர் குடிக்கக் கூடாது. தேயிலை அதிக அளவில் அமிலங்கள் உள்ளதால் உணவு செரிமானத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.
சாப்பிட்ட உடன் புகை பிடிக்கக் கூடாது. மது அருந்துதல் கூடாது. இது புற்று நோயை ஏற்படுத்தும்.
உணவு அருந்திய பிறகு இடுப்பு பெல்ட்டை தளர்த்திக் கூடாது. தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்ட பிறகு இடுப்பில் உள்ள பெல்டை தளர்த்தி விடுவார்கள். இதனால் உடனடியாக உணவு குடலுக்கு சென்று செரிமானக் கோளாறை ஏற்படுத்தும்.