வெந்தயம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
ஊறவைத்த வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரையை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக ரத்தத்தில் கொழுப்பு படிவதை தவிர்க்க முடியும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது அதிக பயன்கள் கொடுக்கிறது. அது என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வெந்தயம் இயற்கையாகவே பல பிரச்சினைகளுக்கு சிறந்தது.
நன்மைகள்:
காலையில் ஊற வைத்த வெந்தயத்தை உட்கொண்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு படிவதைத் தடுத்து இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.
வெந்தயக்கீரை அடிக்கடி உண்டு வந்தால் நீரிழிவு ஏற்படாமல் தடுக்கும்.
வெந்தயத்துடன் கஸ்தூரி மஞ்சள் கலந்து தண்ணீரில் குழைத்து அரிப்பு மற்றும் புண்கள் ஏற்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.
வெந்தயம் ஊற வைத்த தண்ணீரையோ அல்லது வெந்தயத்தை வேக வைத்து நீரையோ குடிப்பவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது தடுக்கப்படும்.
செரிமானம் ஆவதில் பிரச்சினை இருப்பவர்களுக்கு வெந்தயத்தை அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர செரிமான பிரச்சனைகள் தீரும்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இதை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள புற்று நோயின் தன்மை குறையும்.
பெண்கள் வெந்தயத்தை தினமும் இருவேளை உணவுகளை உட்கொண்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இதனால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டாகும்.