Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இந்த துவையலை சுடுசாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்க … வியப்பூட்டும் சுவை …

வேப்பம்பூ துவையல்

தேவையான  பொருட்கள் :

வேப்பம்பூ – 1 கப்

கடலைப் பருப்பு –  2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்

வேர்க்கடலை – 100 கிராம்

கடுகு – 1/4 ஸ்பூன்

பெருங்காயம் – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 2

உப்பு  –  தேவைக்கேற்ப

புளி – சிறிது

எண்ணெய் – தேவையான அளவு

வெப்பம்ப்பூ துவையல்க்கான பட முடிவுகள்

செய்முறை:

கடாயில்  எண்ணெய் விட்டு, வேப்பம்பூவைச் சேர்த்து, நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும் . சிறிதளவு எண்ணெயில் கடுகு, பெருங்காயத் தூள், காய்ந்த மிளகாய் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு , வேர்க்கடலை சேர்த்து, சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் வறுத்த வேப்பம்பூ  , தண்ணீர்  ,  உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால்  அருமையான துவையல் தயார் !!!

Categories

Tech |