நாட்பட்ட பொங்கல் பலகாரம் சாப்பிட்டு 2 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இரண்டு குழந்தைகள் பொங்கலுக்கு தங்கள் வீட்டில் செய்த பலகாரத்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கலன்று செய்த வடை மற்றும் அதிரசம் ஆகியவை வீட்டிலிருந்துள்ளது. இதை யாஷினி(6) மற்றும் ஹரி(4) என்ற சிறுமிகள் எடுத்து சாப்பிட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாட்பட்ட உணவு சாப்பிட்டதால் குழந்தைகள் உயிரிழந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.