தமிழ்நாட்டின் மின் இணைப்புகளில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மின்இணைப்பை தனது பெயரில் வைத்திருந்தாலும், அனைத்து மின்இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம். வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தால், அதில் குடியிருக்கும் வாடகைதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை அந்த வீட்டு மின்இணைப்புடன் இணைத்துகொள்ளலாம் என்றனர்.
மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது ஒருவர் ஒரு வீட்டிற்கு ஐந்து மின் இணைப்பு வைத்திருந்தாலும் ஒவ்வொரு மீட்டருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் இதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ஆன்லைனில் ஆதாரை இணைக்க https://adhar.tnebltd.org/adharupload/ என்ற லிங்க்கை பயன்படுத்தவும். தொலைப்பேசி எண்ணுக்கு வரும் OTPஐ உள்ளீடு செய்துவிட்டு ஆதார் போட்டோவை அப்லோடு செய்தால் வேலை முடிந்தது.