தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியதை திரும்பப் பெற வேண்டும் என மாநில அரசை சிபிஎம் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர், மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த மறுக்கப்படுவதாகவும், இதனால் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் மின் கட்டணம் செலுத்த முடியாத நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.