தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை தான் இந்த இணைப்பிற்கான இறுதி நாள் நாளை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவிலான மக்கள் கூட்டம் மின்வாரியங்களில் கூடுகிறது.
மேலும் இதனால் மக்கள் அசௌகரியங்களை சந்திப்பதாக புகார்கள் பெறப்பட்டுள்ளதால் தமிழக அரசு மின்வாரியங்களுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அனைத்து மின்வாரியங்களும் அரசின் இந்த உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி ஆதாரம் மின் இணைப்பு தொடர்பான பணிகள் காரணமாக மின்வாரியம் கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்னவென்றால், ஆதார் இணைப்பு பணிகளை மேற்பார்வையிட ஒரு நிர்வாக பொறியாளரை நியமிக்க வேண்டும். ஆதார் – மின் நுகர்வோர் எண் இணைப்பு பணிகள் இடையில் எந்த காரணத்திற்காகவும் நிறுத்தப்பட கூடாது.
இந்த செயல்முறையின் அனைத்து விளக்கங்களையும் மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும். ஆதார் இணைக்க வரும் மக்களுக்கு தேவையான அளவிற்கு இருக்கை வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஷாமியான பந்தல் அமைக்க வேண்டும். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், கூடுதல் கவுண்டர்கள் மற்றும் கணினிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த செயல்முறைகள் முற்றிலும் இலவசமானது என்று குறிப்பிட்டுள்ளது.