காமெடி நடிகர் சதீஷ் ‘தமிழ் படம்’ மூலம் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவர், கத்தி, ரெமோ, ஆம்பள, தமிழ் படம் 2, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் காமெடி நடிகராக மட்டும் அல்லாமல், கிரேஸி மோகனுடன் எட்டு வருடங்களாக திரைக்கதை எழுத்தாளராகப் பணியாற்றியுள்ளார். சினிமாவில் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், நீண்ட நாட்களாக மணப்பெண் தேடியும் கிடைக்காமல் வருத்தத்தில் இருந்து வந்தார்.
இதனால், தனக்கு யாரும் பெண் தரவில்லை என்று கூட படத்தின் மூலம் காமெடியாக தன்னைத் தானே கலாய்த்துக் கொண்டதும் உண்டு. மேலும் அவரது நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயனும் இவரை கலாய்த்து பேசியுள்ளார். சமீபத்தில் சதீஸூக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது திருமண வேலையில் பிஸியாக இருக்கும் சதீஸ் பிரபலங்களுக்கு, தனது திருமண அழைப்பிதழை வழங்கி வருகிறார்.
இதனையடுத்து முதல் கட்டமாக சதீஸ் தனது திருமண அழைப்பிதழை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் வழங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் சதீஸ் பகிர்ந்துள்ளார்.
நமது தமிழக முதல்வர் மாண்புமிகு @CMOTamilNadu ஐயா மற்றும் துணை முதல்வர் மாண்புமிகு @OfficeOfOPS ஐயா அவர்களிடம் எனது திருமண அழைப்பிதழை அளித்தபோது 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/pT2nsLX1Cu
— Sathish (@actorsathish) November 20, 2019