எச்.1பி விசா உள்ளவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப பல்வேறு நிபந்தனைகளுடன் அமெரிக்க அரசு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் எச்.1பி விசா பெற்று வேலைக்காக காத்திருந்தவர்கள் இந்த ஆண்டு இறுதி வரை அமெரிக்காவுக்கு வரக்கூடாது என்று கடந்த ஜூன் 22-ஆம் தேதி டிரம்ப் அரசு அதிரடியாக அறிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த உத்தரவை நிபந்தனைகளுடன் டிரம்ப் அரசு தளர்த்தியுள்ளது. அதன்படி காலாவதி ஆகாத எச்.1பி விசா உள்ளவர்கள் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பு தாங்கள் பணியாற்றி வந்த அதே நிறுவனங்களில் அதே வேளைக்கு மட்டுமே திரும்பி வரலாம் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
பழைய வேலையை தொடர விரும்புவோர் வாழ்க்கை துணையும் தங்கள் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் காலாவதியாக விசாவை திறக்கும் கொரோனா தடுப்பு பணியாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவிற்கு மீண்டும் திரும்பி வரலாம் என்று டிரம்ப் அரசு அறிவித்துள்ளது.