இங்கிலாந்து இளவரசர் ஹரி அடுத்தாண்டு வெளியிடவுள்ள புத்தகத்தை மையமாக வைத்து வல்லுநர் ஒருவர் இளவரசி யூஜினியை எச்சரித்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் ஹரி அந்நாட்டைவிட்டு வெளியேறிய நாள் முதலில் இருந்தே புத்தகங்களை எழுத ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் ராஜ குடும்பத்தினர் குறித்த முக்கிய தகவலுள்ள புத்தகம் ஒன்று அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. இதுகுறித்து வல்லுனர் ஒருவர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது அடுத்தாண்டு வெளியாகவுள்ள ராஜ குடும்பத்தினர் தொடர்புடைய அந்த புத்தகத்தை எழுதுவதற்கு இளவரசி யூஜினி உதவியுள்ளார். ஆகையினால் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் தொடர்பான தகவலை வெளியிடுவது தலைக்கு மேல் தொங்கும் கத்தி போன்றது என்று வல்லுநர் கூறியுள்ளார். மேலும் இளவரசி யூஜினி அந்தப் புத்தகம் ஏற்படுத்தும் விளைவினால் யாருடைய கண்களிலும் படாமல் வாழ்வதற்கு கூட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளார்.