கண்டறிவதற்கு கடினமாக இருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் பின்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர் .
புதிய வகை கொரோனா வைரஸிற்கு Fin-796H என்று பெயரிட்டுள்ளனர்.வீடா ஆய்வகங்கள் மற்றும் ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் அந்த புதிய வகை கொரோனா வைரஸ் தெற்கு பின்லாந்தில் கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது .மேலும் இந்த புதிய கொரோனா இதற்க்கு முன்னர் எங்கும் காண்டறியப்படாத வைரஸின் மாறுபாடாக இருப்பதாகவும், மேலும் பி.சி.ஆர் சோதனைகளில் புதிய மாறுபாட்டை கண்டறிய முடியாது என்றும் பின்லாந்து ஆய்வகம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது . இருப்பினும் இந்த மாறுபாடு எங்கு தோன்றியது என்பது குறித்த தகவல்கள் ஆய்வாளர்களிடம் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் பின்லாந்தில் அந்த நோய் தோன்றி இருக்க வாய்ப்பு இருக்காது ஏனென்றால் பின்லாந்தில் கொரோனா தொற்று மற்ற நாடுகளை விட எண்ணிக்கையில் குறைவாக தான் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள் இந்த புதிய மாறுபட்ட கொரோனாவுக்கு எதிராக செயல்படுமா? என்பது தெரியவில்லை.