Categories
உலக செய்திகள்

இந்த விஷயத்தில் பிரான்சின் செயல் முட்டாள்தனமானது… எச்சரிக்கை விடுத்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்…!!

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் விஷயத்தில் பிரான்ஸ் முட்டாள் தனமாக நடந்து கொள்கிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கூறியுள்ளார்.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா என்னும் கொடிய வைரசுக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.  இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சர் ஜான் பெல், ”  பிரான்ஸ் அரசாங்கம் முதலில்  அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு செலுத்த மறுத்தது.

தற்போது என்னவென்றால் 55 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த நிறுவனத்தின் தடுப்பூசியை வழங்க மறுத்துள்ளது.  இந்த செயலானது முற்றிலும் முட்டாள்தனமானது . வாரம் வாரம்  விதிகளை மாற்றுவது அஸ்ட்ராஜெனேகா  நிறுவனத்தின் தடுப்பூசி மட்டுமல்லாமல் கொரோனாவுக்கு எதிரான  மொத்த தடுப்பூசியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பாதிக்கிறது. பிரான்சில் இதுவரை அதிக அளவில் தடுப்பூசி பயன்படுத்தாமல் இருக்கிறது.

தற்போது கொரோனாவின் உருமாற்றம் அடைந்த வைரஸ் மிக வேகமாக பரவியது. அதனை பிரான்சால் தடுக்க முடியாமல் போனது. தடுப்பூசியை போட்டு கொண்டால் ரத்தம் உறைகிறது என்று புகார்கள் எழுகிறது.அதனை நான் குறை சொல்லவில்லை. ஆனால் கொரோனாவால் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனையை  ஒப்பிடும் பொழுது அது சிறிய பிரச்சனை தான்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |