Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி…. மின்வாரியத்தில் எடுக்கப்பட்ட பணிகள்…. அமைச்சர் விளக்கம்…..!!!!

சென்னையில் உள்ள அண்ணா சாலை மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய அலுவலர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார். அப்போது பருவ கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பருவ கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பருவமழையின் போது ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே அதை சரி செய்வதற்காக 12,000 மீ மின் கம்பிகள், 1,50,992 மின் கம்பங்கள் மற்றும் 14,442 மின் மாற்றிகள் போன்றவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதோடு அனைத்து பகுதிகளிலும் தேவையான பொருட்களை கையிறுப்பில் வைத்துக் கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுதும் 36,616 சேதமடைந்த மின் கம்பங்கள் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மழை நீர் வடிகால் பணிகளோடு தொடர்புடைய பணிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள 5 பகுதிகளில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணியானது 2 மாதங்களில் முடிவடையும். மழைக்காலத்தின் போது மின் துண்டிப்பு தொடர்புடைய பிரச்சினைகள் அதிக அளவில் வரும் என்பதால் 75 தொலைபேசி இணைப்புகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத்தின் சொந்த நிறுவுதலின் பேரில் அடுத்து 5 வருடத்தில் 50 விழுக்காடு அளவிற்கு மின் உற்பத்தியானது அதிகரிக்கும். கடந்த வருடத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் கூடுதலாக 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் இந்தத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைப்பார் என்று கூறினார்.

Categories

Tech |