மத்திய ரயில்வேயில் நடைமேடைகளுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மும்பை, அகமதாபாத் மற்றும் ராஜ்கோட் உட்பட 6 கோட்டங்களில் உள்ள 250 நடைமேடைகள் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கொரானா எதிரொலியால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் நடைமேடை கட்டணம் 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்வு அமலில் இருக்கும் என மத்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.