நாங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர தயாராக இருப்பதாக கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னர் இன்ஸ்டாகிராமில் நேரடியாக நடந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா தொற்று அமெரிக்காவிலிருக்கும் கலிபோர்னியா மாகாணத்திலும் கடந்தாண்டு மார்ச் மாதத்திலிருந்து பரவத் தொடங்கியுள்ளது. இந்த கொரோனா தொற்று பரவ தொடங்கியதிலிருந்தே கலிபோர்னியா மிகவும் அதிக அளவில் இழப்புகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தின் பொது சுகாதாரத் துறை தற்போது ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதாவது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட அனைத்து தொழிற்சாலைகளும், வர்த்தக நடவடிக்கைகளும் முழு திறனுடன் இயங்கலாம் என்றும், கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்கள் முக கவசம் கூட அணியத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கலிபோர்னியா கவர்னர் இன்ஸ்டாகிராமில் நேரடியாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது, நாங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் கொரோனா தொற்றை அழிப்பதற்கான திட்டம் நிறைவடைந்துவிட்டது என்று அறிவிக்கவில்லை. ஆனால் கலிபோர்னியா மாகாணத்தின் பொருளாதார நடவடிக்கைகளை திறந்து விட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கலிபோர்னியாவில் இதுவரை 59 சதவீத பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்ஸையாவது போட்டுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்.