Categories
உலக செய்திகள்

ராணுவத்தின் மீது பொருளாதார தடை… பிரபல நாடுகள் எடுத்த அதிரடி முடிவு…!

மியான்மர் ராணுவத்தின் மீது பிரபல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது.

மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ராணுவம் புதிய அரசின் வெற்றியை ஏற்க மறுத்தது. இதுதொடர்பாக ஆங் சாங் சூகி தலைமையிலான கட்சியினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதன்பின் ஆங் சான் சூகி, மியான்மரின் அதிபர் யு வின் மியின்ட் மற்றும் முக்கிய தலைவர்களை வீட்டு காவலில் வைத்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவத்தின் இந்த செயலுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கனடா மற்றும் பிரிட்டன் நாடுகள் 9 ராணுவ அதிகாரிகள் மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. அந்த பொருளாதார தடை குறித்து மியான்மர் ராணுவம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

Categories

Tech |