Categories
தேசிய செய்திகள்

பொருளாதார பாதிப்பு குறைவு தான்… ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பொருளாதார பாதிப்பு குறைவாக ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாநிலமும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார பாதிப்பு குறித்து ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் கொரோனா முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலையில் பொருளாதாரம் பெரிதாக பாதிக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனாலும் இரண்டாம் அலை மிகவும் ஆபத்தானது, அது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனா பாதிப்புகள் சாமானிய மக்களின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது.

Categories

Tech |