Categories
உலக செய்திகள்

நாசமான பொருளாதாரம்…! ”சங்கத்தில் அமெரிக்கா” ட்ரம்ப் வேதனை …!!

கொரோனா தொற்றினால் 10 வருடங்களில் இல்லாத அளவு பொருளாதார சரிவை அமெரிக்கா சந்திக்கவுள்ளது

உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக அமெரிக்கா அதிக அளவு பாதிப்பை சந்தித்து பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு 4.8 சதவீதம் சரிவை சந்திக்கும் என அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனால் பள்ளி நிர்வாகங்களும் தொழில் துறையினரும் தொலைதூர பணிக்கு மாறியுள்ளனர்.

வாடிக்கையாளர்களும் தங்களது தேவைகளை குறைத்துக் கொண்டனர். பொருளாதாரம் அதிகளவில் பாதிக்கப்பட்டதால் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே செலவு செய்கின்றனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு அமெரிக்கா சந்தித்திருக்கும் இந்த பொருளாதார சரிவு இரண்டாவது காலாண்டில் மிகவும் மோசமானதாக மாறும். 2019 ஆம் ஆண்டு நான்காவது காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 2.1 சதவீதமாக இருந்தது.

2020 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி எந்த அளவு எந்த அளவு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிவது மிகவும் கடினம். பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவை ஒட்டுமொத்தமாகவே கண்டறிய முடியும். தொற்றினால் மட்டும் ஏற்பட்ட பொருளாதார சரிவை கண்டறிவது முடியாத காரியம். தற்போது அமெரிக்கா சந்தித்த பொருளாதார சரிவுக்கு நுகர்வோர் செலவினங்கள் குறைந்ததும் முதலீடுகள் குறைந்ததும் தான் தலையாய காரணமாக இருக்கின்றது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே கடந்த வாரம் வெள்ளை மாளிகையின் மூத்த பொருளாதார ஆலோசகர் கெவின் ஹஸாட் இரண்டாம் காலாண்டில் ஜிடிபி மைனஸ் 15 முதல் 20 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது “ஊரடங்கு தளர்த்தப் பட்டவுடன் மூன்றாவது காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் உயர்வை சந்திக்கும். நான்காவது காலாண்டில் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி புதிய உச்சத்தைத் தொடும். இதன்மூலம் அடுத்த வருடம் மிகச்சிறந்த பொருளாதார வளர்ச்சியை நாம் அடைய முடியும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

Categories

Tech |