அணுசக்தி ஒப்பந்தத்தில் வரம்பு மீறி செயல்பட்டால் ஈரான் அரசின் மீதான பொருளாதார தடை அதிகமாக உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை அந்நாடு திரும்ப பெற்றுக் கொண்டதையடுத்து,இரு நாடுகளுக்கிடையே மோதல் உருவானது. அணு சக்தி திட்டத்தை ஈரான் கை விட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியதையடுத்து, ஈரான் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த நிலையில்,இரு நாடுகளுக்கிடையே மோதல் அதிகரித்தது.இந்நிலையில் அணு சக்தி திட்டத்தை ஈரான் கை விட வில்லையென்றால், அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் அதிகமாக உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.