Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான்…. கடுமையாக உயர்ந்த சமையல் எண்ணெய் விலை…!!!

பாகிஸ்தானில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நெய் மற்றும் சமையல் எண்ணைய்க்கான  விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது.

பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே, அங்கு சில தினங்களுக்கு முன்பாக எரிபொருளின் விலையானது, வெகுவாக அதிகரித்தது. இந்நிலையில் சமையல் எண்ணெய் விலையும் ஒரு லிட்டருக்கு சுமார் 213 ரூபாயாக அதிகரித்தது.

எனவே, அங்கு ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் 605 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. மேலும், ஒரு கிலோ நெய் 208 ரூபாய் அதிகரித்து, 555 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |