Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இடையூறாக நிற்கும் வாகனங்கள்… நடைபெறும் தீவிர சோதனை…. போலீஸ் நடவடிக்கை….!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்தை சீரமைத்தல் மற்றும் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் போக்குவரத்து காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி போக்குவரத்து துணை காவல்துறையினர் மாநகர் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர் .

அதிலும் குறிப்பாக ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்தல், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு இந்த மாநகர் பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பல்வேறு வாகன ஓட்டிகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது.

அதாவது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்ததாக 5 ஆயிரத்து 487 பேர், சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்கள் 146 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 32 பேர், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்தவர்கள் 53 பேர், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்ததாக 201 வழக்குகள் என மொத்தம் 6 ஆயிரத்து 817 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளிடமிருந்து மொத்தம் 4 லட்சத்து 86 ஆயிரத்து 900 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |