Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடிக்கு  90% ஆதரவு இருக்கு…. OPSசுக்கு அவ்வளவு ஆதரவு இல்ல… MGR ஸ்டைலுக்கு மாற சொன்ன டிடிவி ..!!

அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்,  சில பேர் என்னிடம் கேட்டார்கள். எடப்பாடிக்கு  90 சதவீதம் ஆதரவு இருக்கு. பன்னீர் செல்வத்திற்கு இல்லை என்று… 90 சதவீத ஆதரவு இருக்குல்ல..  புரட்சித்தலைவர் வழியில் தலைமை பொறுப்பிற்கு பெட்டியை வைத்து தேர்தலை வைக்க வேண்டியதுதானே என்று நான் சொன்னேன்.

அமமுக கழகத்தின் பொதுக்குழுவை இதே இடத்தில் வைக்கலாம் என எல்லாம் சொன்னார்கள்.  அம்மா அவர்கள் தொடர்ந்து பொதுக்குழுவை நடத்திய இடம் இது. நானும் இந்த இடத்தில் பொருளாளராக 2007 இல் அம்மா அவர்களிடம் ஆசி வாங்கிக்கொண்டு, இங்கே கழகத்தின் வரவு, செலவு திட்டங்களை எல்லாம் வாசித்தவன் நான், இங்கே நடத்த வேண்டும் என்று நமது கரிகாலன், செந்தமிழன், முருகன் போன்ற கழக நிர்வாகிகள் பிடிவாதமாக இருந்தார்கள்.

மண்டபமும் அன்றைக்கு இருந்தது, இங்கே பத்தாயிரம், பதினைந்தாயிரம் பேர் வருவார்கள். சுதந்திர தினமாக இருக்கிறதே..  திருச்சி என்றால் பெரிய இடத்தில் மாநாடு போல நடத்தினால் வருகிறவர்கள் வரட்டும் என்று. ஆனால் அம்மா அவர்கள் தொடர்ந்து பொதுக்குழு நடத்திய இடத்தில் நடத்த வேண்டும். ஏனென்றால் இயக்கம் ஆரம்பித்து முதல் பொதுக்குழு கொரோனா கட்டுப்பாடுகளால் காணொளி வாயிலாக நடத்தினோம்.

அதனால் முதல் பொதுக்குழு அம்மாவுடைய திருப்பெயரை தாங்கி இருக்கின்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வருங்காலத்தில் அம்மாவின் பெயரை தமிழ் கூறும் நல்லுலகத்திலே நிலைநாட்டப் போகின்ற இயக்கம், அதன் முதல் பொதுக்குழுவை இங்கே ஸ்ரீவாரு மண்டபத்தில் நடத்துவது சரி தான் என எண்ணிய பிறகு தான் நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன் என தெரிவித்தார்.

Categories

Tech |