Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை சொன்ன மாதிரி தெரில…! எல்லாம் எடப்பாடியின் திருவிளையாடல்… DMKவை விளாசிய டிடிவி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான்கு ஆண்டு எடப்பாடி அவர்களின் திருவிளையாடலை எதிர்த்து, மக்கள் கோவப்பட்டு தான்  10 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்த திமுகவுக்கு,  திருந்தி இருப்பார்கள் என்று நினைத்து ஆட்சியை கொடுத்தார்கள். திமுக சொன்ன தேர்தல் வாக்குகளை கூட நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி தான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாலும்,  ஊடகம் வெளிச்சத்தில் இருப்பதாலும்,  அவர்களை நிறைய பேர் தூக்கிப் பிடிப்பதாளும்  இன்றைக்கு ஆட்சியில் ஒரு பெரிய சாதனை செய்பவர்களாகவும் முதலமைச்சர் அவரே சொல்லிக் கொண்டிருக்கிறார்.  ஆனால் மக்கள் மிகவும் வருத்தத்திலும்,  ஏமாற்றத்திலும் இருக்கிறார்கள். ஒன்றரை ஆண்டுகளில் நாமெல்லாம் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய அவப்பெயரை மக்கள் மத்தியில் திமுக ஆட்சி பெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் அவை வெளிப்படும்.

2023 தேர்தல் டிசம்பர் நவம்பரில் தேர்தல் கூட்டணி பற்றி பேசுவோம். 2 தேசியக் கட்சியில் நாங்கள் ஒரு தேசிய கட்சியுடன் போட்டியிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. வருகின்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில்களை சொல்லி சொல்லி அலுத்து போய் விட்டேன்.  நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் ?  எங்க சித்தி வரும்பொழுது அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

நாங்கள் தான் எதிர்க்கட்சி, மத்த யாருமே செயல்படல என்று அண்ணாமலை சொன்ன மாதிரி எனக்கு தெரியல. பிஜேபி தமிழ்நாட்டில் திமுகவை எதிர்த்து  சொல்கிறோம் என்று சொல்கிறார். மத்தவங்களை விட நாங்கள் ( பிஜேபி )  தான் சிறப்பாக செயல்படுகிறது என்று சொன்னரா என எனக்கு தெரியல. அது மாதிரி எல்லாம் சொல்லுவாரா ?

நான் நாங்க திமுகவை எதிர்த்து செயல்படுகின்ற ஒரு எதிர்க்கட்சி என்று சொல்வேன். நான்தான் சிறப்பாக செயல்படுறேன்,  நான்தான் முதல் கட்சி என்று ஒரு கட்சியோட பொதுச் செயலாளராக சொல்லல. அதே மாதிரி அண்ணாமலையும் பேசுவாரான்னு தெரியல தெரிவித்தார்.

Categories

Tech |