சமீபத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதில், சிறந்த நடிகர் அவர் பெயரை சொல்வது சரியாக இருக்காது. ஏனென்றால் உதவி கேட்டவர் பெயரை சொல்லக்கூடாது. இதுவரை சொல்லவில்லை, இனியும் சொல்லமாட்டேன். அவர் படம் ரிலீஸ் ஆக வேண்டும். ஒரு சிறந்த நடிகர், மக்கள் மனதில் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். திரைப்பட நடிகர்.. அடுத்த நாள் படம் ரிலீஸ் ஆகணும். அதற்கு அந்த படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டதற்கு சான்றிதழ் வாங்காமல் விட்டுவிட்டார்கள், அதனை வாங்க வேண்டும். அந்த படத்தின் தயாரிப்பாளர் வந்தார். எப்படியாவது நீங்கள் பெற்று தர வேண்டும் என்று சொன்னார். அன்றைக்கு பார்த்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. எப்படி வாங்க முடியும் ? கமிட்டி எல்லாம் சேர்ந்துதான், கூட்டம் போட்டு கையெழுத்து வாங்க வேண்டும்.
எங்களுக்கு நாளை ரிலீஸ் ஆகாவிட்டால், பெரும் பிரச்சனையாகிவிடும், ஆகவே எல்லாவற்றிற்கும் செய்தி வெளியிட்டு விட்டோம்.. திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகப்படும் என்று… இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் தான் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று என்னை நாடினார்கள்.
அதற்கு நம்முடைய தலைமைச் செயலாளர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மத்திய அரசோடு இருக்கின்ற உயர் அதிகாரிகள் எல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அதற்கு அனுமதி வாங்கி, அடுத்த நாள் திரைக்கு வருவதற்கு உண்டான வேலையை செய்து கொடுத்தோம் என தெரிவித்தார்.