திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு இருக்கிறது. திருப்பதி கோயில்கள் வாசலில் கூட புகைப்படம் எடுக்க முடியாது. தமிழகத்தில் தான் சாமி சிலைகளுக்கு முன்பு செல்பி எடுக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.
எனவே திருச்செந்தூர் கோயிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்ற கிளை ஆனது உத்தரவிட்டிருக்கிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு சுற்றறிக்கை அனுப்பவும், இந்து அறநிலைத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டு இருக்கின்றனர். கோயில்கள் சுற்றுலாத்தலங்கள் அல்ல என்றும், உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கூறி இருக்கிறார். கோயில்களில் நாகரிகமான உடைகளை அணிய வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்