செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். 5 நாட்களாக தொடர்ந்து காவிரியில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. 5 நாட்களிலே எந்த ஒரு அமைச்சரும் சென்று பார்க்கவில்லை. நேற்றைய தினம் நான் வருவேன் என்று இங்கே நம்முடைய சகோதரர் முன்னாள் அமைச்சர் தங்கமணி இடத்திலும்,
அருமை சகோதரர் தர்மனிடத்திலும் சொன்ன உடனே, முகாம்களிலே தங்க வைக்கப்பட்டு இருக்கின்ற மக்களை பார்வையிடுவதற்கும், முகாம்களிலே தங்க வைக்கப்பட்டு இருக்கின்ற மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.அதைக் கேட்டவுடனே, அதை அறிந்தவுடனே, அமைச்சர்கள் இன்றைய தினம் வந்து பார்வையிட்டிருக்கின்றார்கள். வெள்ள பாதிப்பில் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு உடனுக்குடன் உதவி செய்வதற்கு அம்மாவின் ஆட்சியிலே நடவடிக்கை எடுத்தோம்.
அதற்கான நிவாரணத்தை கொடுத்தோம். அவர்களை நாங்கள் பாதுகாப்பாக தங்க வைத்தோம். அவர்களுக்கு வேண்டிய மருத்துவ வசதிகளையும் செய்து கொடுத்தோம். ஆனால் இந்த விடியா அரசு, 5 நாட்களாக காவிரியிலேயே வெள்ளம் புரண்டு ஓடுகிறது. இதனால் வீடுகளிலேயே வெள்ளம் சூழ்ந்து மக்கள் வேதனைகளும், துன்பத்திலும் ஆளாகியிருக்கின்றார்கள். அவைகள் எல்லாம் கண்டுகொள்ளாத அரசு தான் இந்த வீடியா அரசு. திமுக அரசு. ஆகவே மக்கள் இந்த அரசு மீது கடும் கோபத்தில் இருக்கின்றார்கள். இன்றைக்கு மக்களை பார்க்காத அரசுதான் திமுக அரசு.
துன்பத்திலும் வேதனையிலும் தவிக்கின்ற மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் அவர்களுக்கு வேண்டிய நிவாரணத்தை அளிப்பதற்காகவும் நான் வந்திருக்கின்றேன். அதுமட்டுமல்ல இங்கே இருக்கின்ற மதிப்பிற்குரிய முன்னாள் அமைச்சர் இந்த தொகுதியின் சட்டபேரவை உறுப்பினர் அருமை சகோதரர் தங்கமணி என்றைக்கு வெள்ளம் வந்ததோ, எப்போது மக்கள் பாதிக்கப்பட்டார்களோ, அப்போதே அவர்களை பாதுகாப்பான முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அதேபோன்று ஈரோடு மாவட்டம் அருமை சகோதரர் கே.சி கருப்பன் அவர்கள் பவானி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் முன்னாள் அமைச்சர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு உதவிகளையும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.