செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியில் ஒரு தலைமை கீழ் கூட்டணி அமைத்து, அந்தக் கூட்டணியில் அண்ணா திமுகவிற்கு சில இடங்கள் கொடுக்கின்ற அளவிற்கு நோக்கி தான் அண்ணா திமுக பயணித்துக் கொண்டிருக்கிறது, அது தடுக்கப்பட வேண்டும்
சசிகலாவோ, எடப்பாடி பழனிச்சாமியோ, ஓ பன்னீர் செல்வமோ இந்த முன்னாள் அமைச்சர்களோ, அவ்வளவு பேரும் ஊழல்வாதிகள். அண்ணா திமுக என்பது ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிராக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் துவக்கப்பட்ட கட்சி. இந்த முக்கியஸ்தர்களை பார்த்து எவ்வளவு பேர் இந்த கட்சிக்கு வந்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்கள் என்றால், ஒருவரும் இல்லை.
எல்லோரும் எம்ஜிஆரை பார்த்து வந்தவர்கள், ஜெயலலிதா அம்மாவை பார்த்து வந்தவர்கள், அண்ணா திமுக என்கிற கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை சொல்லி வாக்கு கேட்பவர்கள். யாராவது போய் எடப்பாடி பழனிச்சாமி தான் நல்லாட்சி தருவார் என்று வாக்கு கேட்க முடியுமா ? அண்ணா திமுக எம்ஜிஆர் உடைய கட்சி, எம்ஜிஆர் உடைய ஆட்சி, அம்மாவுடைய ஆட்சி அதைத்தான் நாம் சொல்லிக் கேட்கிறோம் என தெரிவித்தார்.