தமிழ்நாட்டில் வெவ்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் எதிர்பாராத விதமாக நடந்த வெவ்வேறு விபத்துகளில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.