அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொண்டர்களிடம் பேசும் போது, கட்சியினுடைய நிர்வாகிகள் அத்தனை பேரும், அண்ணா திமுக இன்றைக்கு எதிர்கட்சியாக இருந்தாலும் பிடிப்போடும், துடிப்போடும், உயிர்தூடிப்போடும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் எம்ஜிஆர் மீது வைத்திருக்கின்ற பற்று, புரட்சித்தலைவி அம்மாவின் மீது வைத்திருக்கின்ற பாசம். இவர்கள் இருவர் மீதும் வைத்திருக்கின்ற பற்றும், பாசமும் தான் இன்றைக்கு அண்ணா திமுகவை வழி நடத்துகிறது.
தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது, அள்ளிக் கொடுப்பதிலே வள்ளல், வாரி வாரி கொடுப்பதிலே மன்னன், அண்ணா மட்டுமல்ல ஏழை மக்களுக்காக எத்தனையோ உதவிகளை செய்தார் எம்ஜிஆர். அண்ணாவின் உடைய பிறந்த நாளை விழாவாக கொண்டாடுவதற்கு முதலிலே அரசாணை வெளியிட்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அண்ணா பெயரில் இயக்கம் கண்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.
ஆகவே தான் இன்றைக்கு அண்ணாவுடைய பிறந்த நாளை அண்ணா மறைந்து இத்தனை ஆண்டு காலம் கழித்தும் இன்றைக்கும் அண்ணாவின் உடைய பிறந்த நாளை அதிமுக கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு கழகத்தினுடைய இடைகால பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அண்ணா பிறந்தநாள் விழாவை தொகுதி வாரியாக 234 தொகுதிகளிலும் கொண்டாடுமாறு உத்தரவிட்டிருக்கிறார். எல்லா இடங்களிலும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. காரணம் இந்த ஆட்சியினுடைய அவல நிலையை எடுத்துச் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.