Categories
அரசியல்

“தலைக்கு மேல் கத்தி”…. சிக்குவாரா ஈ.பி.ஸ்?…. டெல்லிக்கு பறந்த ஸ்பெஷல் தூது….!!!!

எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு வழக்கில் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் அவரது நண்பர் செல்வகுமார் மற்றும் தனிப்பிரிவு உதவியாளர் மணி ஆகியோர் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய மோசடி புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு தலைமறைவாக இருந்த இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்த காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொடநாடு விவகாரம் தொடர்பிலும் தகவல்களை பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குப் பிறகு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவருடைய அலுவலகங்கள் மற்றும் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சில சிக்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் முன்னாள் அதிகாரிகள், அமைச்சர்கள் முதல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரை அனைவரது தலைக்கும் கத்தி காத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் சிக்கல்களை தீர்ப்பதற்கு டெல்லியின் உதவிக்கரம் தேவைப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் சசிகலாவின் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியினை ஆஃப் செய்யும் வகையில் அவர் மீது ஏற்கனவே உள்ள வழக்குகளை நெருக்கடி கொடுக்கவும் மத்திய அரசின் தயவு எடப்பாடிக்கு தேவைப்படுகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மத்திய பாஜக தலைமையுடன் நெருக்கம் காட்டி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அதனை நிரூபிக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு தூது விடும் வகையில் ஸ்பெஷல் புத்தாண்டு வாழ்த்துக்களை பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு தெரிவித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |