Categories
அரசியல் மாநில செய்திகள்

தெருவில் நிற்கும் எடப்பாடி… நாகரிகமே இல்லாம பேசுறாரு… தினமும் கூட்டம் வருது… பரிதவிக்கும் அதிமுக விவகாரம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி,  ஜெயக்குமார் எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டேங்குறார். நான் அன்னைக்கே கூறினேன் 4800 கோடி ஊழல், சிபிஐ விசாரணை டெல்லியில் சென்று வேணாம், இங்கே வந்து கதவை அடித்ததற்கு, ரோட்டில் கலாட்டா நடந்தது என்று சும்மா பொய் சொல்லி புகார் கொடுத்து, இங்கு சிபிஐ விசாரணை வேண்டும் இப்படியெல்லாம் பேசக்கூடிய, ஒரு நாகரத்தின் கீழே இறங்கி பேசக்கூடிய நபராகத்தான் ஜெயக்குமாரை நாங்கள் பார்க்கிறோம்.

நாங்கள் எவ்வளவு சொல்லிட்டோம், தினமும் செய்தியாளர்களை பார்ப்பது, ஏதாவது பொய்யை சொல்வது, தேவையில்லாமல் பேசுவது,  இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார். இப்போது பார்க்கிறார் அல்லவா, இவ்வளவு கூட்டம் எங்கே இருந்து வருகிறது என்று என ? எடப்பாடி பழனிச்சாமி என்கின்ற சர்வாதிகாரியின் உடைய அரசியல் வாழ்வு முடிவுக்கு வருகிறது.

அந்த முடிவுரையை அவரே எழுதிக் கொண்டார், அவர்தான் காரணம். ஓபிஎஸ்-ஐ வெளியே எடுத்து அந்த வேலையை பண்ணிட்டார். பொதுச்செயலாளர் என்கின்ற நிரந்தர பொதுச் செயலாளர் என்று அம்மாவை கூறிவிட்டு, அந்த பதவியை எடுத்து தூரமாக வைத்துவிட்டு, இன்றைய தினம் சர்வாதிகாரியாக அந்த பதவியை அடைய துடிக்கிறார்.  அது நிறைவேறப்போவதில்லை. தெருவிலே நிற்கப் போகிறார்கள்,  நாளைய சரித்திரம் திரும்பும் சொல்லும்.

நியாயம், தர்மம் அது எங்கே இருக்கிறதோ அங்கே நாங்கள் எல்லாம் இருப்போம். அதாவது அற்புதமான விஷயம். அன்னைக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அய்யா வந்து திமுகவில் இருந்தார்கள், அங்கு தப்பு நடந்ததை கேட்டதால், அவரை வெளியே அனுப்பி விட்டார்கள். அதே மாதிரி இன்றைக்கு அந்த சம்பவம் நடந்துள்ளது, ஓபிஎஸ் ஐயாவை வெளிய அனுப்பி உள்ளார்கள். அதனால் நிச்சயமாக நல்லதே நடக்கும்.

எப்போது கேட்டாலும் நம்முடைய அன்பிற்குரிய அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தர்மத்தின் வாழ்வுதனை தர்மமே மீண்டும் வெல்லும் என்று சொல்வார். அந்த தர்மம் இப்போது வென்று கொண்டிருக்கிறது, விரைவிலே ஓபிஎஸ் அவர்கள் தலைமை பதவியிலே, ஒருங்கிணைப்பாளர் என்கின்ற பதவியில் ஒட்டுமொத்த கழகத் தொண்டர்களுடைய ஆதரவோடு பெறுவார் என்பதற்கு இத்தகைய கூட்டங்கள் எல்லாம் இன்றைக்கு அடையாளமாக இருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |