தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவான கருணாஸ் அதிமுகவில் கூட்டணி வைக்க அதிமுகவினர் அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை.
ஏனெனில் தான் சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதன் காரணமாகவும், சசிகலா கருணாஸை அதிமுகவில் அறிமுகம் செய்ததன் காரணமாகவும் அதிமுகவினர் என்னை நீக்கி விட்டனர் என்றும், எடப்பாடி பழனிசாமி உங்களை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார் என்று கருணாஸ் ஆவேசமாக கூறியுள்ளார். மேலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டுக் கொடுத்து தேர்தல் ஆதாயம் தேடிக்கொண்ட எடப்பாடி மற்ற சமுதாயத்தினரிடம் விரோதத்தை ஏற்படுத்திக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.