செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது. சரி.. மின்சாரத்தையாவது ஒழுங்காக கொடுக்கிறார்களா என்று கேட்டால், அதுவும் கிடையாது. மின்சாரம் எப்ப வரும் ? எப்ப போகும் ? என்ற நிலை தான் திமுக ஆட்சியில்… எனவே மக்கள் ஏகாபித்த கோவத்தில் இந்த அரசாங்கத்தின் மீது இருக்கிறார்கள். இதில் திராவிட மாடல் என்று சொல்கிறார், என்ன மாடல் ? மக்கள் மீது வரி சுமத்துவது தான் திராவிட மாடலா?
மின்கட்டணத்தை மாதம் மாதம் கணக்கு எடுப்போம் என்றார்கள், அதுவும் எடுக்கவில்லை. மக்களுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருந்தார்கள். இந்த அரசாங்கம் வந்ததிலிருந்து எந்த குடும்பமும் மகிழ்ச்சியாக இல்லை, அதுதான் உண்மை, மகிழ்ச்சியாக இருக்கின்ற குடும்பம் இன்றைக்கு முதலமைச்சருடைய குடும்பம்.
அமைச்சர்களுடைய குடும்பம் தான் மகிழ்ச்சியாக இருக்கிறது, மற்ற யாருடைய குடும்பங்களும் மகிழ்ச்சியாக இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக 4 1/2 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். அவர் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தார், இப்போது நம்ம முதலமைச்சர் வாரிசு அடிப்படையில் வந்திருக்கிறார். அவர் அப்பா முதலமைச்சராக இருந்தார், தலைவராக இருந்தார் திராவிட முன்னேற்றக் கழகத்தில்… அதனால் ஸ்டாலினும் வந்தார்.
ஆனால் எடப்பாடி உழைப்பால் வந்தவர், சாதாரண குடிமகன், விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர். அப்படி படிப்படியாக வளர்ந்து இன்றைக்கு அரசியலில் முதல் அமைச்சராகி பெரிய இயக்கத்திற்கு… தமிழ்நாட்டில் பெரிய இயக்கம் எது என்றால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ? அதனுடைய தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பொதுச் செயலாளர், இப்போதைக்கு இடைக்கால பொதுச் செயலாளராக வருங்காலத்தில் பொதுச்செயலாளராக போகிறவர், அவர் நான்கரை ஆண்டு காலம் ஆட்சி செய்தார் என தெரிவித்தார்.