fir போட்ட கொலை செய்தவர்கள், கொள்ளையர்களை கைது செய்தால் திருப்தியாக இருக்கும் என புகழேந்தி ஸ்டாலிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகி புகழேந்தியிடம் திமுக ஆட்சியை எப்படி பாக்குறீங்க என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதில் அளித்த அவர், மாற்றான் வீட்டுத் தோட்டத்து மல்லிகை மணக்கும் என்று பேரறிஞ்சர் அண்ணா சொல்வார்கள். குறை இருந்தால் குறையை சொல்லலாம், நிறை இருந்தால் நிறையை சொல்லாம்.
அதிமுக ஜெயித்து ஆட்சிக்கு வந்திருந்தால் எடப்பாடி பாக்கெட்டிலும், தங்கமணி, வேலுமணி போன்ற முன்னாள் அமைச்சர்கள் பாக்கெட்டிலும் நிச்சயமாக மோடி படம் இருந்திருக்கும். அம்மா படத்தை சுமா பேருக்கு போட்டிருப்பார்கள். அந்த பாதையில் தான் போய்கொண்டு இருகிறார்கள்.
ஆனால் அதற்கு மாறாக தானே திராவிட முன்னேற்ற கழக ஆட்சி போய்க்கொண்டிருக்கிறது. ஆனாலும் திமுக மீது எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது. நான் இன்றைய தினம் பத்திரிக்கை செய்தியாளர்களிடம் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மாண்புமிகு முதலமைச்சர் மீது கூட ஒரு சிறிய வருத்தத்தை நான் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனென்றால் கொலையில் ஈடுபட்டவர்கள், கொள்ளையில் ஈடுபட்டவர்களெல்லாம் FIR போட்ட பின்னால் சுதந்திரமாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு கைது செய்யாமல் விட்டு இருப்பது ஏன் ? என்று மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் கைது நடவடிக்கை எடுத்தால் முழு திருப்தியளிக்கும் என தெரிவித்தார்.