அண்மையில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இன்றைக்கு எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைக்கு செப்டம்பர் 12.2017-ல் பொதுச்செயலாளர் என்ற பதவி அம்மா அவர்களுக்கு மட்டும்தான், அதனால் வருங்காலத்தில் யாரும் கிடையாது என்று பொது குழுவில் கூடி முடிவெடுத்து விட்டு, இன்றைக்கு அம்மா அவர்களுக்கு துரோகம் செய்கின்ற விதமாக தலைமை பதவியில் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கி,
இன்றைக்கு நீதிமன்றத்திலே அவர்கள் பதில் சொல்ல முடியாமல் தவித்தது உங்களுக்கு தெரியும். மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்றால் அது பொதுச்செயலாளராக தான் இருக்க வேண்டுமா? வேறு ஏதாவது ஒரு பெயரில் இருக்கலாம் அல்லவா. பொதுச்செயலாளர் பதவி அம்மா அவர்களுக்கு தான் என்று, அன்றைக்கு பன்னீர்செல்வத்தையும், கட்சிக்காரர்களை ஏமாற்றுவதற்காக…. அம்மாவுக்கு தான் அந்த பதவி வேறு யாருக்கும் கிடையாது என்று ஏமாற்றி பதவிக்கு வந்தவர்.
பின்னர் பன்னீர்செல்வதையும் ஏமாற்றிவிட்டு, அதுதான் மெஜாரிட்டி 95% பொதுக்குழு உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள், தேர்தல் வைத்து நீங்கள் தலைமை பதவிக்கு வந்திருக்கலாமே. அம்மாவுக்கு என்று மறைந்த தலைவருக்காக… அந்தப் பதவி யாருக்கும் கிடையாது என்று சொல்லிவிட்டு, இப்போது அம்மாவுக்கும் துரோகம் செய்யும் விதமாக நடந்து கொண்டிருக்கிறார்.
அதனால் அவர் திருந்தினால் பார்ப்போம், ஒரு வேளை அவர் திருந்தினால் அவரோடு சேர்வதை பற்றி யோசிப்போம். ஏனென்றால் எனக்கு தெரிந்தவரை அவர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை. அவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு கூட பதவி வெறியிலே, ஆட்சி அதிகாரத்தின் வெறியிலே அவர் துரோகம் செய்யக்கூடியவர் என தெரிவித்தார்.