Categories
அரசியல் மாநில செய்திகள்

சர்வாதிகாரி ஈ.பி.எஸ் கனவு இனி பலிக்காது – ஓபிஎஸ் மகன் அதிரடி பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி ரவீந்திரநாத், என்னை பொறுத்த வரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிரந்தர பொதுச் செயலாளர் என்பது புரட்சித்தலைவி, மாண்புமிகு அம்மா என்பது நிரூபணம் ஆகியுள்ளது. நாடு போற்றும் நல்ல தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் தலைவணங்கி வரவேற்கின்றோம் அந்த தீர்ப்பினை. ஆகவே அந்த தீர்ப்பை மகிழ்ச்சியாக எல்லோரும் பகிர்ந்து கொண்டிருக்கின்றோம்.

இந்த நேரத்தில் ஊடகங்கள் வாயிலாக தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகளும் அஇஅதிமுக தொண்டர்களும், புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, தந்தை பெரியார், அண்ணா படங்களுடன் ஓபிஎஸ் அண்ணன் படத்தையும் எடுத்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை தமிழகம் முழுவதும் தெரிவிக்கிறார்கள்.

பொதுச்செயலாளர் அம்மா இல்லை, நிரந்தர பொதுச் செயலாளர் இல்லை என்று சொல்லி அந்த பதவியை அடைய துடித்த சர்வாதிகாரத்திற்கு எதிர்ப்பாக கிடைத்த நியாயமான தீர்ப்பு தான் இந்த தீர்ப்பு. எடப்பாடி பழனிச்சாமி இந்த கட்சியை எந்த காலத்தில் நடத்த முடியாது என்பதை இந்த தீர்ப்பு உணர்த்து இருக்கிறது. ஆகவே தர்மம் வென்று இருக்கிறது, அதர்மம் அழிந்திருக்கிறது. எடப்பாடியினுடைய மோசமான அரசியல்கனவுகள்  இனி பலிக்காது என விமர்சித்தார்.

Categories

Tech |