செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எடை குறையுதுன்னு முட்டியை வைத்து அழுத்தினார்கள் அல்லவா, அதுதான் திராவிட மாடல். ஒரு நரிக்குறவர் பெண்ணிடம் ஸ்டாலின் போய், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். பிறகு அந்த பெண்ணே…
இந்த அட்டையை கொடுத்தாங்க; அதோட வாங்கிட்டு போயிட்டாங்க, ஒரு லட்ச ரூபாய் தாரேன்னு சொன்னாங்க, தரல. கடை வைக்கணும்ன்னு கேட்டா நாடோடி மாதிரி தெருவில் திரியுறவுங்களுக்கு கடை ஒரு கேடா அப்படின்னு பேசுறாங்க, அய்யோனு விட்டுட்டு போய்ட்டாங்கனு சொல்லியது, இது திராவிட மாடல்.
இலவசங்களால் நாடு வளர்ந்திருக்கிறது என்று, அவரால் நிருபிக்க முடியுமா ? இலவச அரிசி போடுறீங்க. முதல்ல ரெண்டு ரூபாய்ல போடுறீங்க, அப்புறம் ஒரு ரூபாய்க்கு போடுறீங்க, அப்புறம் இலவசம்னு வந்துட்டீங்க. ரெண்டு ரூபாய்க்கு வக்கு இல்லாம போயிட்டோம் ஐந்து ஆண்டுகளில்.. அடுத்து ஒரு ரூபாய்க்கு நாதியில்லாமல் போயிட்டோம். திருப்பி இலவசம் என வந்துட்டீங்க.
இலவசமாக எத்தனை ஆண்டுகளுக்கு அரிசி கொடுத்துற முடியும் ? விவசாயிகள் தானே உலகத்துக்கு கொடுக்கணும். விவசாயி தானே நாட்டுக்கு கொடுக்கணும். விவசாயியை பிச்சைக்காரனாக வைத்து மாதம் 2000, 6000 கொடுக்கிறோம் என்றால் அந்த நாடு, நாடா என பாருங்க ? என விமர்சித்தார்.