Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இடப்பிரச்சினை காரணமாக …. ஆத்திரமடைந்த வாலிபரின் வெறிச்செயல் ….கைது செய்த காவல்துறையினர் ….!!!

இடப்பிரச்சினையால் விவசாயி ஒருவர் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியை அடுத்துள்ள  இடையாத்தாங்குடி கன்னிகோவில் தெருவை சேர்ந்த புருஷோத்தமன்(55) என்பவர் விவசாயக் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவரும் இதே பகுதியில் வசிக்கும் ஜெயகுமார்(29) என்பவரும் இடையாத்தாங்குடி சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அனுபவித்து வந்துள்ளனர் . இந்த நிலையில் ஜெயக்குமாரின் வீட்டிற்கு அருகே உள்ள இடத்தில் புருஷோத்தமன் கருவேலமரங்களை வெட்டி  கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயக்குமார் என் இடத்திலுள்ள மரங்களை எதற்கு விடுகிறாய் என்று கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .

இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் , அருகிலிருந்த கட்டையால் புருஷோத்தமனை தாக்கி உள்ளார் . இதைகண்ட அக்கம் பக்கத்தினர் பலத்த காயமடைந்த புருஷோத்தமனை மீட்டு கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக  கொண்டு சென்றனர் .அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திட்டச்சேரி காவல்துறையினர் ஜெயக்குமாரை கைது செய்தனர்.

Categories

Tech |