அமெரிக்காவில் தனது வீட்டிற்கு குடியேற வரும் பெண்கள் வாடகை பணத்திற்குப் பதிலாக தன்னுடன் பாலியல் உறவு கொள்ளலாம் என்று வீட்டு உரிமையாளர் விளம்பரம் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. இந்த சூழலில் நியூயார்க்கின் long islandஐ சேர்ந்தவர் தான் எட்டி (eddie). இவர் craigslist என்ற விளம்பர நிறுவனத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில், எனது சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடிவரும் 20-50 வயதுக்குள்ளான பெண்கள் வாடகை பணம் எதுவும் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக என்னுடன் தனிமையில் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் மோசமான கொடூர புத்தி கொண்ட அவனை கையும் களவுமாக எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென்று இன்சைடு எடிஷன் (inside edition) பத்திரிகையின் தயாரிப்பாளரான இளம்பெண் அலிசியா பவர்ஸ் (alycia powers) தான் வாடகைக்கு வர விரும்புவதாக அவனிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அவன் ஒரு ஹோட்டல் முகவரியை கொடுத்து இங்கு வாருங்கள் என்று அந்த பெண்ணை அழைத்துள்ளார்..
பின்னர் காரில் நாம் இருவரும் தனிமையில் இருக்கலாம் என்று அவனை வர சொன்ன அந்த பெண் முன்னதாக திட்டம் போட்டு தனது குழுக்களை அங்கு வரவழைத்து , ரகசிய கேமரா மூலம் எட்டிஐ வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அவரை கையும் களவுமாக பிடித்து அனைத்து உண்மைகளையும் கூறினார்..
இதனால் அதிர்ச்சி அடைந்து போன எட்டி அவரிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் இது தொடர்பாக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
கொரோனாவால் அமெரிக்காவே கதிகலங்கி நிற்கும் நிலையில் இவர் வாடகைக்கு பதிலாக என்னுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியிருப்பது அப்பகுதி மக்களை மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.