உலகில் உள்ள அனைத்து விதமான செயல்பாடுகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை போன்ற அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் இந்த ஆன்லைன் முறை செயல்பாடுகளில் சில மோசடிகளும் நடைபெற்று வருகிறது. அதன்படி ஏடிஎம் கார்டு பயன்படுத்தி நேரடியாக பொருட்கள் வாங்கும் வணிக நிறுவனங்களில் பண பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.
இந்த பண பரிவர்த்தனையின் போது ஏடிஎம் கார்டு முதல் முறை பயன்படுத்தும் போது முழு விவரங்களையும் கொடுத்தால் போதும். இதனையடுத்து அடுத்த முறை ஏடிஎம் கார்டின் விவரங்கள் அதில் சேமிக்கப்பட்டு விடும். அதன்பின் நாம் பணம் செலுத்த ஏடிஎம் கார்டின் 3 இலக்க CCV நம்பர் அல்லது 4 இலக்க PIN நம்பர் மட்டும் கூறினால் போதுமானது ஆகும். ஆனால் தற்போது இந்த ஏடிஎம் கார்டு பண பரிவர்த்தனை முறையின் போது வணிக நிறுவனங்கள் ஏடிஎம் கார்டு முழு விவரங்களை சேமிக்க தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அதாவது இனிமேல் ஷாப்பிங் செய்துவிட்டு ஏடிஎம் கார்டு மூலமாக பணம் செலுத்தும்போது ஏடிஎம் கார்டின் 18 இலக்க எண் உள்ளிட்ட முழு விவரங்களையும் கொடுக்கும் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைவரும் தங்களது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை மனப்பாடம் செய்து வைத்திருக்க வேண்டும். இத்தகைய தனிப்பட்ட நபரின் ஏடிஎம் கார்டு விவரங்களை சேமிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் ஆன்லைன் பண பரிவர்த்தனை மோசடிகள் தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த புதிய தடையானது வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.